| ADDED : பிப் 29, 2024 10:17 PM
நயினார்கோவில், - பரமக்குடி அருகே நயினார்கோவில், போகலுார் ஒன்றியங்களில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் ரூ.4 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.நயினார்கோவில், போகலுாரில் வேளாண் விரிவாக்க மைய கட்டடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்தது. மேலும் அங்குஇருந்த பொருட்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் தவித்த நிலையில் தொடர்ந்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. மேலும் தலா ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது குறித்தும் செய்தி வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் குத்து விளக்கேற்றினார். விழாவில் வேளாண் இணை இயக்குனர்(பொறுப்பு) தனுஷ்கோடி, செயற்பொறியாளர்கிளாட்வின்ஸ்ரேல், போகலுார் ஒன்றிய தலைவர் சத்யா, துணை தலைவர் பூமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.