உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர் வழிபாட்டு உரிமை கோரி கடிதம்

கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர் வழிபாட்டு உரிமை கோரி கடிதம்

ராமநாதபுரம்,:கச்சத்தீவு திருவிழாவில் தமிழக கத்தோலிக்க மீனவர்களின் வழிபாட்டு உரிமை கோரி இலங்கை மீன் வளத்துறை அமைச்சருக்கும், யாழ்பாணம் மறை மாவட்ட ஆயருக்கும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியது.மீனவர்களின் பாதுகாப்பிற்கும், கடல் மீன் வளம் வேண்டியும் 1913 முதல் கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். திருவிழாவின் போது, பாரம்பரிய மீனவர்கள் தாய் பங்கான தங்கச்சிமடத்தில் இருந்து அருட்பணியாளர்கள், தங்கள் குடும்பத்தினர், உறவினர்களை அழைத்துக்கொண்டு நாட்டுப்படகில் கச்சத்தீவு சென்று கொண்டாடி வந்தனர். இதில் இலங்கை மீனவ மக்களும், அவர்களின் உறவினர்களும், அருட்பணியாளர்களும் விருந்தினராக அழைத்து வரப்பட்டு அன்பை பகிர்ந்து கொண்டாடினர்.கடந்த 1974ம் ஆண்டு ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய பாரம்பரிய மீனவர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தில், ஒப்பந்தத்தின் 5வது சரத்தில் சர்ச் திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் விசா உள்ளிட்ட எந்த அனுமதியும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று வழிபடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் சமீப காலமாக மீறப்படுகிறது. பாரம்பரிய நாட்டுப்படகு பயணத்தை 2014ல் தடை செய்தனர். 2018ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையை மீட்டு உறுதிப்படுத்தினர். அதன்பின், 2019 முதல் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் சென்று வருகின்றனர்.உயர் நீதிமன்ற ஆணையை மத்திய, மாநில அரசுகள் இதுவரை முழுமையாக செயல்படுத்தவில்லை.கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா இரு நாட்டு பாரம்பரிய கத்தோலிக்க மக்களின் நம்பிக்கை, கலாசாரம் மற்றும் பண்பாடு சம்பந்தப்பட்டது. மீனவர்களின் நம்பிக்கை, கலாசாரத்திற்கு கத்தோலிக்க திருச்சபை மதிப்பளிக்க வேண்டும். பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உரிமையை திருச்சபை புறக்கணிக்க கூடாது.இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய கத்தோலிக்க மீனவர்களின் உணர்வுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை மதிப்பளிக்கும் வகையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா அழைப்பிதழை கச்சத்தீவு பாரம்பரிய பயண குழுவிற்கும் அனுப்ப வேண்டும் என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை