உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் அறிவிக்க கூடாது: கிராம மக்கள் எதிர்ப்பு

கீழக்காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் அறிவிக்க கூடாது: கிராம மக்கள் எதிர்ப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் அறிவிக்ககூடாது என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் கீழக்காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கு குறித்து இறுதி அறிக்கை சமர்ப்பிப்பது சம்மந்தமாக சிறப்பு கிராமகூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சண்முகவள்ளி தலைமை வகித்தார். கூட்டத்தில் பறவைகள் சரணாலயம் அறிவிக்ககூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது, கீழக்காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான பறவைகள் வருவது கிடையாது. நீர் வழித்தடங்களும் முறையாக இல்லாததால் தண்ணீர் வருவதில்லை. சீமை கருவேல் மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் வறண்ட பூமி ஆகவே உள்ளது. வனத்துறையினரும் முறையாக பறவைகள் சரணாலயத்திற்கு எந்த விதமான பாதுகாப்பு அளிப்பதில்லை. இங்குள்ள மேலக்கண்மாய், கீழக்கண்மாய் ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர வேண்டுமென்று மக்கள் முடிவு செய்துள்ளனர்.இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை