உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மதுரை-ராமேஸ்வரம் வரை கோல்கட்டா பக்தர்கள் தீர்த்தகுடத்துடன் நடைபயணம்

மதுரை-ராமேஸ்வரம் வரை கோல்கட்டா பக்தர்கள் தீர்த்தகுடத்துடன் நடைபயணம்

ராமநாதபுரம், : கோல்கட்டாவைச் சேர்ந்த 25 பக்தர்கள் மதுரையில் இருந்து தீர்த்த குடங்களுடன் நடை பயணமாக ராமேஸ்வரத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள பூத நாதர் சிவன் கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த 25 பக்தர்கள் புனித இடங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வர யாத்திரைப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்படி நேற்று முன்தினம் மதுரைக்கு ரயிலில் வந்து அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ராமநாதபுரம் வழியாக நடை பயணமாக சென்றனர்.இதுகுறித்து கோல்கட்டா பக்தர் தேவசிஸ் கூறுகையில், ராமேஸ்வரத்தில் தங்கிக் கடலில் நீராடி விட்டு புனித தீர்த்தம் எடுத்துச் செல்கிறோம். இன்று (நேற்று) இரவு ஆந்திர மாநிலம் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு செல்கிறோம்.அதன் பிறகு கோல்கட்டா சென்று ஆதி பூதநாதர் சிவன் கோயில் சிவராத்திரி பூஜையில் சுவாமிக்கு தீர்த்த அபிேஷகம் செய்ய உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி