உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஏர்வாடி தர்கா புதிய வாசல் திறப்பு விழா

 ஏர்வாடி தர்கா புதிய வாசல் திறப்பு விழா

கீழக்கரை: ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் யாத்ரீகர்கள், பொதுமக்கள் வழிபாட்டிற்காக வருகின்றனர். மிகப் பழமையான கட்டுமான வசதி கொண்ட ஏர்வாடி தர்காவிற்குள் வழிபாட்டிற்காக செல்லக்கூடிய யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் புனித மக்பரா அமைந்துள்ள இடத்திற்கு அருகே மவுலீது உள்ளிட்ட பிரார்த்தனைகளை செய்துவிட்டு மீண்டும் வந்த வழியிலேயே திரும்பிச் செல்வது போன்ற கட்டமைப்பு இருந்தது. இதனால் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு மற்றும் விசேஷ தினங்களில் ஒரே நேரத்தில் ஏராளமான யாத்ரீகர்கள் உள்ளே சென்று விட்டு இடநெருக்கடியில் வந்து செல்லும் நிலை இருந்தது. இதனை தவிர்ப்பதற்காக யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி புதிய வாயில் கதவு அமைக்கப்பட்டு பிரார்த்தனை முடிந்தவுடன் வரும் போது எவ்வித நெருக்கடியும் இன்றி இலகுவாக வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஜமாலி ஆலிம் தலைமை வகித்தார். ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபைத் தலைவர் அகமது இப்ராஹிம், துணைத் தலைவர் முகமது சுல்தான், செயலாளர் ஜாஹிர் உசேன் மற்றும் தர்கா பொது மகா சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜாமியா மர்கஸ் வேந்தரும், மத்திய ஹஜ் கமிட்டி உறுப்பினருமான முகம்மது பைஜி உஸ்தாத் புதிய வாயில் கதவை திறந்து வைத்தார். உலக நன்மைக்கான சிறப்பு மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி