மேலும் செய்திகள்
புனித பயணத்திற்கு மானியம் பெறலாம்
8 hour(s) ago
அடிக்கல் நாட்டு
8 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
8 hour(s) ago
தன்னார்வலர் நேர்காணல்
8 hour(s) ago
வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை
8 hour(s) ago
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் பகுதியில் போதிய இருக்கை வசதியில்லாததால் நோயாளிகளை தரையில் அமர வைத்தனர்.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு ஆக.,ல் திறக்கப்பட்டது. இது அனைத்து நவீன வசதிகளும் கொண்டதாக உள்ளது. அவசர சிகிச்சை வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, 10 அறுவை அரங்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. தரை தளத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன் மையங்கள் செயல்படுவதற்கு கட்டடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்ரே பிரிவிற்கான கட்டடத்தில் கழிவு நீர் கசிவதால் அந்த கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. ஸ்கேன் மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இங்கு நோயாளிகள் அதிகமாக வரும் நிலையில் போதுமான இருக்கை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்க வந்த நோயாளிகளை அரசு மருத்துவமனை நிர்வாகம் தரையில் அமர வைத்துள்ளது. நோயாளிகள் உடல் நலம் பாதித்த நிலையில் வருவதால் அவர்களால் நிற்க முடியாமல் தரையில் அமர்கின்றனர்.அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஸ்கேன் மையத்தில் நோயாளிகள் அமர்வதற்கு தேவையான இருக்கை வசதிகள் செய்ய வேண்டும்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago