உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பார்த்திபனுார் 3 வது வார்டில் ரோடு அமைத்தும் தேங்கும் மழை நீர் சிரமத்தில் மக்கள்

 பார்த்திபனுார் 3 வது வார்டில் ரோடு அமைத்தும் தேங்கும் மழை நீர் சிரமத்தில் மக்கள்

பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் ஊராட்சியில் பேவர் பிளாக் ரோடு அமைத்தும் மழை நீர் தேங்குவதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் மேல பார்த்திபனுார் ஊராட்சி பார்த்திபனுார் ஆசாரி தெருவில் தொடர்ந்து மழைநீர் தேங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். இங்கு 2023 --24 ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது. இதற்காக 2 லட்சத்து 48 ஆயிரத்து 72 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் ரோடு அமைக்கும் போது பள்ளமான பகுதியை சீர் செய்யாமல் போடப்பட்டதால் மீண்டும் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி பணம் செலவிட்டும் எந்த பயனும் இல்லை என மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வீடுகளில் தண்ணீர் புகுவதுடன் கொசுத் தொல்லை மற்றும் தொற்றுநோய் பீதியில் மக்கள் இருக்கின்றனர். ஆகவே பேவர் கல் தளத்தை உயர்த்தி அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை