உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் பஜார் பகுதியில் அடிப்படை வசதியின்றி மக்கள்.. அவதி: பயணியர் நிழற்குடை கழிப்பிடம் அமைக்க வேண்டும்

ராமநாதபுரம் பஜார் பகுதியில் அடிப்படை வசதியின்றி மக்கள்.. அவதி: பயணியர் நிழற்குடை கழிப்பிடம் அமைக்க வேண்டும்

ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்களின் அரண்மனை, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ராமலிங்கவிலாசம் உள்ளன. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் சேதுபதி மன்னர்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள அரண்மனைக்கு வந்து செல்வதால் அப்பகுதி முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது. அரண்மனையை சுற்றிலும் அனைத்து விதமான வணிக சந்தைகளும் இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள், மக்கள் வந்து செல்கின்றனர். 10 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வந்து செல்கிறது. அரண்மனையில் இருந்து கோட்டை விநாயகர் கோயில், சர்ச் பகுதி, கேணிக்கரை விலக்கு, வண்டிக்காரத் தெரு என முக்கிய ரோடுகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒரு வழிப்பாதையாக மாற்றினாலும் அதை மக்கள் கடைபிடிக்காததால் சிறிய விபத்துகள் நடக்கிறது. அக்ரஹாரம் ரோட்டில் பஸ்சை திருப்புவதற்கு கூட இடம் இல்லாத வகையில் சாலையோர கடைகள் அதிகரித்துள்ளன. அரண்மனை பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்துவதற்கான வசதி இல்லாததால் ரோட்டின் ஓரம் நிறுத்துகின்றனர். பயணிகள் நிழற்குடையும், கழிப்பறை வசதியும் இல்லாததால் வியாபாரிகள், மக்கள் தினமும் சிரமப்படுகின்றன. பஜார் பகுதிக்கு மக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம்: மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வந்துசெல்லும் ராமநாதபுரம் மெயின் பஜார், அரண்மனை பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை