| ADDED : ஜன 15, 2024 11:15 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டுவாசல்களில் பொங்கல் வைத்து இயற்கை அன்னைக்கு படைத்து மகிழ்ந்தனர்.அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட புது நெல்லை குத்தி அரிசி, உமி தனியாக பிரித்தெடுத்து புதிய மண் பானையில் பொங்கலிட்டனர். கடவுளுக்கு பழங்கள், பனங்கிழங்கு போன்றவற்றை படைத்து மகிழ்ந்தனர். வீடுகள் தோறும் பொங்கலிட்டு சுவாமி வழிபாடு நடத்தினர். பல தெருக்களில் இளைஞர்கள் பணம் வசூலித்து கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தெருக்களில் சிறு குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் கபடி போட்டிகள், கயறு இழுக்கும் போட்டிகள், உறியடிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.