உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரஜினி மகள் சுவாமி தரிசனம்

 ரஜினி மகள் சுவாமி தரிசனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா, கணவர் விசாகனுடன் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா, இவர் திரைப்பட துறையில் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவர், கணவர் விசாகனுடன் நேற்று காலை ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தார். இவர்கள் முதலில் கோவில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினார்கள். பின் கோவிலில் சுவாமி, அம்மன் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். பின்னர் மதுரை சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி