உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டராக்ட் சங்க விழா

ரோட்டராக்ட் சங்க விழா

கீழக்கரை:கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்டராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. சிறப்பு இயக்குனர் யூசுப் சாஹிப் முன்னிலை வகித்தார். முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார்.ஆண்டறிக்கையை ரோட்டராக்டர் பிரபாகரன் சமர்பித்தார். புதிய நிர்வாகிகளுக்கு ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் முனியசாமி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.ரோட்டராக்ட் தலைவராக ரஞ்சித் மணிகண்டன்,செயலாளராக கார்த்திக் உட்பட 11 பேர் பொறுப்பேற்றனர். மாவட்டத்தில் சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களின் சேவையை பாராட்டி ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி உட்பட ஆறு பேருக்கு துரோணச்சாரியார் விருதை, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் தினேஷ்பாபு வழங்கினார். சங்க ஆலோசகர் மரியதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ