உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை: இ.கம்யூ., முற்றுகை

மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை: இ.கம்யூ., முற்றுகை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கின்றனர். இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட தீவு பகுதியில் உள்ள மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தினமும் 400 வெளி நோயாளிகள், 100க்கு மேலான உள்நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 8 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.இதனால் அவசர சிகிச்சை வரும் நோயாளிகள் மற்றும் உள் நோயாளி கள் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். பலரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் செல்ல வேண்டிய அவலம் உள்ளது.இதனைக் கண்டித்து நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமேஸ்வரம் தாலுகா செயலாளர் செந்தில்வேல் தலைமையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு உடனடியாக டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி மருத்துவ அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை