உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப்பொருளான துணை சுகாதார நிலைய கட்டடம்

காட்சிப்பொருளான துணை சுகாதார நிலைய கட்டடம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்தில் கட்டி முடித்து திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக இருக்கும் துணை சுகாதார நிலையத்தை திறக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.முதுகுளத்துார் அருகே நல்லுார் அதனை சுற்றியுள்ள மாங்குடி, மேலகன்னிச்சேரி, சிறுமணியேந்தல், மணலுார் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நல்லுார் கிராமத்தில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக துணை சுகாதார நிலையம் கட்டும் பணி நிறைவடைந்தது. பணி முடிந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. முதுகுளத்துார் அருகே நல்லுார் சுற்றுவட்டார கிராம மக்கள் வேறு வழியின்றி காய்ச்சல், இருமல், விஷப்பூச்சி கடி உட்பட நோய்களுக்கு முதுகுளத்துார் செல்லும் அவலநிலை உள்ளது. கர்ப்பிணிகள் பரசோதனைக்காக அலையும் பரிதாப நிலை உள்ளது. இப்பகுதியில் போதுமான பஸ் வசதி இல்லாததாலும் நோயாளிகள் வேறுவழியின்றி சரக்கு வாகனம், ஆட்டோ உள்ளிட்டவற்றில் செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நல்லுார் கிராமத்தில் கட்டி முடித்து திறக்கப்படாமல் இருக்கும் துணை சுகாதார நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை