| ADDED : ஜன 21, 2024 03:23 AM
ராமநாதபுரம்: தமிழகத்தில் மீண்டும் தென்னை வாரியத்தை செயல்படுத்த அரசு முன் வர வேண்டும் என தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்திய உற்பத்தில் தமிழகம் பெரும்பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தென்னை விவசாயிகள் பயன் பெறும் விதமாகமத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வருகிறது. மாநில விவசாயிகள் பயன் பெறுவது அரிதாக உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தென்னை வாரியம் என மாநில அரசால் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தென்னை விவசாயியை நியமித்தனர். தென்னை விவசாயிகளுக்கு தேவையான மானிய விலையில் கன்றுகள், உரங்கள், தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்வது, இழப்பு ஏற்படும் போது இழப்பீடு பெற்றுத்தருவது போன்ற பணிகளை தென்னை வாரியம் விவசாயிகளுக்கு செய்து வந்தது. அ.தி.மு.க., அரசு வந்த பின் தென்னை வாரியம் செயல்பாட்டில் இல்லை. அப்படியே முடங்கிப் போய்விட்டது. தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தென்னை விவசாய வளர்ச்சிக்காக தென்னை வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், என தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.-