உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நவ பாஷாண கடலில் நீர்மட்டம் குறைந்தது

 நவ பாஷாண கடலில் நீர்மட்டம் குறைந்தது

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ள கடலில் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேவிபட்டினத்தில் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி செய்யவும் பக்தர்கள் தினமும் அதிகளவில் வருகின்றனர். வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மூன்று நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர்மட்டம் உயர்ந்து நவக்கிரகங்கள் நீரில் மூழ்கியதால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட் டிருந்தது. மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்ததால் கடல் நீர்மட்டம் குறைந்து நவக்கிரகங்கள் வெளியில் தெரிந்தன. இதையடுத்து வழக்கம்போல் பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை