| ADDED : மே 15, 2024 06:40 AM
ராமேஸ்வரம் ராமநாதசுவாமிகோயில், திருப்புல்லாணிஆதிஜெகநாத பெருமாள் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில், தேவிபட்டினம் நவபாஷாண கோயில், ஏர்வாடி தர்காஉள்ளிட்ட புனித ஆன்மிக தலங்களுக்கு தமிழகம் மட்டுமின்றிவெளி மாநிலங்கள், நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் -கீழக்கரை, சாயல்குடி, துாத்துக்குடி, திருச்செந்துார்செல்லும் ரோடு குறுகியதாகவும் இவ்விடங்கள் சந்திப்புகள், கிழக்கு கடற்கரை சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் 19 இடங்கள்கரும்புள்ளி பகுதிகளாக நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்கனவேஅடையாளம் கண்டுள்ளனர்.இந்நிலையில்பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வழியாகதுாத்துக்குடிக்கு செல்லும் பிராதன சாலையில் மேம்பாலம்அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரைமின்விளக்குகள் எரியவில்லை. மேலும் பாலத்தில் ரோடு பலஇடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில்சிக்குகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார்தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என மக்கள்அதிருப்தி தெரிவித்துள்ளனர்.எனவே விபத்தில்உயிர் பலிகள்ஏற்படும் முன்பாக மேம்பாலத்தில் மின் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சேதமடைந்துள்ள பகுதிகளை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.