உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

 குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வசந்த நகர் ராமமூர்த்தி மகன் செந்தில் கணேஷ் 20. இவர் சபரிமலைக்கு மாலை போடுவதற்கு முன் குலசாமியை வழிபடுவதற்காக கூரிச்சாத்த அய்யனார் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அவரின் வளர்ப்பு நாயை குளிப்பாட்ட அங்குள்ள குளத்திற்கு சென்ற போது, நாய் குளத்திற்குள் பாய்ந்துள்ளது. உடனே அதை காப்பாற்ற செந்தில் கணேஷ் குளத்திற்குள் இறங்கினார். நாய் மீண்டும் கரையேறிய நிலையில் அவர் குளத்தில் முழ்கினார். உடனே குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் தேடிய நிலையில் 15 அடி ஆழ சகதியில் இருந்து வாலிபரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை