மேலும் செய்திகள்
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
05-Nov-2025
மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
09-Oct-2025
மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
09-Oct-2025
ராணிப்பேட்டை: நவ்லாக் பஞ்சாயத்து தலைவியை திட்டியதாக துணைத்தலைவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், நவ்லாக் பஞ்., தலைவியாக பொறுப்பு வகிப்பவர் சரஸ்வதி குமார். கடந்த 5ம் தேதி தி.மு.க., -- பஞ்., துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி செயலர் வாசு ஆகியோர், பொது செலவின கணக்கு ரசீது கேட்டு பஞ்., தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த இருவரும் பஞ்., தலைவியை ஜாதி ரீதியாக அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பஞ்., தலைவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி, வி.சி., மோட்டூரைச் சேர்ந்த ஊராட்சி செயலர் வாசு மற்றும் புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த பஞ்., துணைத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஊராட்சி செயலர் வாசு, துணை தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் புகாரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பஞ்., தலைவி சரஸ்வதியின் கணவர் குமார் மீதும் வழக்கு பதியப் பட்டுள்ளது.
05-Nov-2025
09-Oct-2025
09-Oct-2025