உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடன் தொல்லையால்வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால்வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால்வாலிபர் தற்கொலைசேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே, மேட்டுப்பட்டி தாதனுார், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கவுதம், 30. திருமணமாகாத இவர், சேலத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரிந்தார். சொந்த தொழில் தொடங்க, பல்வேறு இடங்களில், 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ளார். கடனை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதோடு, அவரது தந்தை நாராயணசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு, தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை கவுதம், அவரது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை