சேலம், : வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:வேளாண்மையில் பட்டப்படிப்பு படித்தவர்களால், வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு, திட்டப்படி வங்கி கடன் வழங்கப்படும். இதன்மூலம் கிடைக்கும் நிதி உதவி, வட்டி மானியம் போக, கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் மொத்த திட்ட மதிப்பில், 50 சதவீத மானியம், அதிகபட்சம், 1 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் ஒப்புதல் பெற்ற பின், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற, 21 முதல், 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறி-யியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு, தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினி திறன் பெற்ற மற்றும் குடும்-பத்துக்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டும் நிதி உதவி பெற தகுதி உடையவர்.பதிவு செய்ய தேவையான ஆவணங்கள், 10, பிளஸ் 2 வகுப்பு சான்றிதழ், பட்ட படிப்பு சான்-றிதழ், ஆதார், ரேஷன் கார்டுகள், வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை தேவை. அக்ரிஸ்நெட் இணைய முகப்பில் ஆக., 31க்குள் பதிவு செய்ய வேண்டும். விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் சமர்ப்-பிக்க வேண்டும். கூடுதல் விபரம் பெற, வேளாண் இணை இயக்குனர், வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலர்களை அணுகலாம்.