உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1 லட்சம் மதிப்பு ராஜவலை பறிமுதல்

ரூ.1 லட்சம் மதிப்பு ராஜவலை பறிமுதல்

மேட்டூர் : மேட்டூர் அணையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்-யப்பட்ட இரு ராஜ வலைகளை மீன்வளத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.மேட்டூர் அணை, தெலுங்கனுார் நீர்பரப்பு பகுதியில் மீனவர்கள் தடை செய்யப்பட்ட ராஜவலைகளை பயன்படுத்தி திலேப்பியா மீன்களை பிடித்து விற்பனை செய்தனர். இதில், ஏராளமான சிறு-வகை மீன்களை, நீர்பரப்பு பகுதியில் போட்டதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.நேற்று காலை மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா கலைசெல்வி, ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் பாலதண்டா-யுத பாணி மீன்வள பாதுகாவலர்கள் நடராஜன், சுரேஷ், ராமசாமி ஆகியோர் தெலங்கானுார் கோம்பை பகுதிக்கு ஆய்வுக்கு சென்-றனர்.அப்போது அங்கு மீனவர்கள் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட தலா, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு ராஜ வலைகளை மீன்-வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். வலைகளை பயன்படுத்-திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, உதவி இயக்குனர் உமா கலைசெல்வி நேற்று கொளத்துார் போலீசில் புகார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ