| ADDED : ஆக 17, 2024 04:38 AM
ஆத்துார்: ஆத்துார் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று, தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவி பத்மினிபிரியதர்ஷினி தலை-மையில் நடந்தது. இக்கூட்டத்தில், 41 தீர்மானங்கள் வாசிக்கப்-பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் நடத்திய விவாதம்:அ.தி.மு.க., கவுன்சிலர் பன்னீர்செல்வம்: கொத்தாம்பாடி மயா-னத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்கு வசதியில்லை. இரவு நேரத்தில் உடல் அடக்கம் செய்யும்போது சிரமமான நிலை உள்-ளது. கொத்தாம்பாடி-கல்பகனுார் இடையே வசிஷ்ட நதி குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திலும் மின்விளக்கு வசதி-யில்லை.ஒன்றிய குழு தலைவர் பத்மினிபிரியதர்ஷினி: மயானத்தில் மின்-விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேம்பாலம் வழி-யாக செல்லும் சாலை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதால், பி.டி.ஓ.,விடம் தகவல் தெரிவித்து, மின்விளக்கு பணிகள் மேற்-கொள்ளப்படும்.அ.தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன்: ஈச்சம்பட்டியில், 1984ல் கட்டப்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிலரது வீடுகள் மட்டும் கணக்கெடுத்துள்-ளனர். சேதமடைந்த அனைத்து வீடுகளிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.ஒன்றிய மேலாளர் பரிமளா: விடுப்பட்ட பயனாளிகள் விபரம் கேட்டறிந்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.தே.மு.தி.க., கவுன்சிலர் முருகன்: தவளப்பட்டி அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் பயன்படுத்த முடி-யாமல் உள்ளது.ஒன்றிய குழு தலைவர் பத்மினிபிரியதர்ஷினி: பள்ளி சுகாதார வளாகம் பராமரிப்பு செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.