சேலம் : தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவா-லயங்களை சீரமைத்தல் பணிக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகி-றது. இத்திட்டத்தில் சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட், ஒலிபெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்ப-லிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகு-வர்த்தி, ஸ்டான்கள், பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு ஜெபம் செய்வதற்கான பெஞ்ச் உள்ளிட்ட உபகரணங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற கூடுதல் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்-பட்டுள்ளது. தவிர கட்டட வயதுக்கு ஏற்ப, 10 முதல், 15 ஆண்டு வரையான ஆலயத்துக்கு தற்போது வழங்கும் நிதி, 2 லட்சத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மானியமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல், 15 - 20 ஆண்டு வரையான கட்டடத்துக்கு, 4 லட்-சத்தில் இருந்து, 15 லட்சம் ரூபாயாகவும், 20 ஆண்டுக்கு மேலான கட்டடத்துக்கு, 6 லட்சத்தில் இருந்து, 20 லட்சம் ரூபா-யாக உயர்த்தப்பட்டுள்ளது. கலெக்டர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, சம்பந்-தப்பட்ட ஆலயத்தில் ஆய்வு நடத்தப்படும். இதற்கு கலெக்டர் அலுவலக அறை எண்: 110ல் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நல அலுவல-கத்தை அணுகி பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.