சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம், கல்யாண சுந்தரம் காலனியை சேர்ந்தவர் ராஜூ, 49. ராசிபுரத்தில் நகை கடை நடத்துகிறார். இவர், சேலம், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனு:கருப்பூர், கோட்டகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டை சேர்ந்த மோகனா, 28, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும் அவரது கணவர் வீராவும், என்னிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். அதன்படி மோகனா, என்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'சுபநிகழ்ச்சி நடக்க உள்ளது. 15 பவுன் நகை வாங்க வேண்டும். வீட்டுக்கு கொண்டு வாருங்கள்' என்றார்.அதை நம்பி நகைகளை எடுத்து, கடந்த, 6ல் அவர் வீட்டுக்கு சென்றேன். அப்போது, அந்த பெண், வீட்டின் கதவை சாத்திக்கொண்டு நெருக்கமாக நின்றார். அப்போது, வீட்டின் வெளியே மறைந்து நின்றிருந்த வீரா, புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின் அவர் வீட்டுக்குள் வந்து, 'என் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், மொபைல் போனில் உள்ளது. இதை வெளியே சொன்னால் மானம் போய்விடும். இதை வெளியே சொல்லாமல் இருக்க, 2.5 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாயை கேட்டனர். அதை கொடுத்தும் தொடர்ந்து நகை, பணம் கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து விசாரித்த போலீசார், மோகனாவை கைது செய்து அவரது கணவரை தேடுகின்றனர்.