உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் ஓட்டிய சிறுவன் தாய்க்கு ரூ.6,000 அபராதம்

மொபட் ஓட்டிய சிறுவன் தாய்க்கு ரூ.6,000 அபராதம்

சேலம்: சேலம், அய்யம்பெருமாம்பட்டி, உழவன் வட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் மனைவி விஜயா, 42. இவர்களது, 13 வயது மகன், நேற்று பெங்களூரு பைபாஸில் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே, ஸ்கூட்டி மொபட்டை ஓட்டினார். இதை பார்த்த போக்குவரத்து பிரிவு போலீசார் அவரை பிடித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின் விஜயாவுக்கு, 6,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சேலத்தில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனத்தை ஓட்ட, பெற்றோர், பாதுகாவலர், மற்றவர்கள் அனுமதிக்கும்பட்சத்தில், வாகன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை