உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும் வண்ண ஒட்டு பொறி அட்டை

பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும் வண்ண ஒட்டு பொறி அட்டை

பனமரத்துப்பட்டி, இயற்கை முறையில் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் அலுவலர் வேலு கூறியதாவது:காற்று மூலம் எளிதில் அடித்துச்செல்லப்படும் சிறு உடல் அமைப்பை கொண்ட பூச்சிகள் பல வண்ணங்களால் கவரப்படும் குணமுடையவை. பல வண்ண அட்டைகளில் ஒட்டும் பசை(ஆமணக்கு எண்ணெய், வாசலின், கிரீஸ்) தடவி, ஒட்டு பொறிகளாக பயன்படுத்தலாம். ஒரு ஏக்கரில் பூச்சிகளை கண்காணிக்க 5, பூச்சிகளை கட்டுப்படுத்த, 25 ஒட்டுப்பொறிகள் வைக்கலாம். ஒட்டு பொறிகள், பூச்சிகளை கவர்ந்து அழித்துவிடும். மஞ்சள் வண்ண ஒட்டு பொறி அட்டை, வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன், பழ ஈ, சுருள் பூச்சி ஆகியவற்றை கவரும். நீல அட்டை, இலைப்பேன், பருத்திக்காய் கூண் வண்டு ஆகியவற்றை கவரும். ஊதா, பச்சை, வெள்ளை அட்டை, இலைப்பேன், பூ பேன், பருத்திக்காய் கூண் வண்டு ஆகியவற்றை கவரும்.ஆரஞ்சு அட்டை, பூச்சிகள் தத்துப்பூச்சிகளை கவர்ந்துவிடும். வண்ண ஒட்டும் பொறிகளை, 10 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து ஒட்டும் திரவத்தினை மீண்டும் தடவ வேண்டும். குறைந்த செலவில் இயற்கை முறையில் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதால் பயிர் சேதம் தடுக்கப்பட்டு, மகசூல் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ