உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழை மரம் சேதம் பழம் விலை உயர்வு

வாழை மரம் சேதம் பழம் விலை உயர்வு

சேலம்: தமிழக காய்கறி மார்க்கெட்டுகள், உழவர்சந்தைகள், பழ மண்டிகளுக்கு தேவையான வாழைக்காய், வாழைப்பழங்கள், ஈரோடு, சத்தியமங்கலம், திருச்சி, துறையூர், தஞ்சாவூர், துாத்துக்குடி, நெல்லை, மதுரை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.சில வாரங்களாக தமிழகத்தில் கோடை மழை பெய்து அப்போது வீசிய சூறாவளி காற்றால் பல இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழக மார்க்கெட்டுகளுக்கு தினமும், 250 லாரிகளில் விற்பனைக்கு வந்த வாழைப்பழம், தற்போது, 100 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால் பழங்களின் விலை படிப்படியாக உயர்ந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ