உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.9.70 லட்சம் மோசடி

சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.9.70 லட்சம் மோசடி

சேலம்:மகுடஞ்சாவடி அருகே எர்ணாபுரத்தை சேர்ந்த, 41 வயதுடையவர், சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவர் பேஸ்புக்கில் வர்த்தகம் செய்வது குறித்த விளம்பரத்தை பார்த்தார். அதில் உள்ள இணைப்பை க்ளிக் செய்து தொடர்புடைய வாட்ஸாப் குழுவில் இணைந்தார்.அதில், ஒரு மர்ம நபர் தெரிவித்த, 'ஆப்' மூலம் குறைந்த அளவில் முதலீடு செய்தார். அதற்கு கமிஷனாக, 2,390 ரூபாய் கிடைத்தது. இதை நம்பி அடுத்தகட்டமாக கடந்த ஜன., 29 முதல் பிப்., 5 வரை, 9.70 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் எந்த கமிஷனும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை