| ADDED : ஆக 17, 2024 04:42 AM
ஓமலுார்: பெரியார் பல்கலை பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:பெரியார் பல்கலையில், குடிமையியல் பணித்தேர்வு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம் அனைத்து போட்டி தேர்வுக-ளுக்கும், மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகி-றது. பல்கலை பயிற்சி மையம், சேலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்துடன் இணைந்து வரும், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 போட்டி தேர்வுக்கான, ஒரு மாத இல-வச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது.பல்கலை மாணவர்கள் மட்டுமின்றி, வெளியில் இருந்து போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் சேர்ந்து பயன்பெறலாம். மாணவர்களுக்கு தேர்வு குறிப்பு, மாதிரி வினாத்தாள்கள் இலவச-மாக வழங்கப்படும். இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். வரும் 19 மதியம், 3:00 மணிக்கு பெரியார் பல்கலை ஆட்சி பேரவை கூடத்தில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது. இதில் சேர்ந்து பயில, பல்கலை நுாலக இரண்டாவது தளத்தில் செயல்படும், குடிமையியல் தேர்வு பயிற்சி மையம் மற்றும் வழி-காட்டுதல் மையத்தில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 9789319722 என்ற எண்-ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.