உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஐ.டி., ஊழியர் வீட்டில் 25 பவுன் திருட்டு

ஐ.டி., ஊழியர் வீட்டில் 25 பவுன் திருட்டு

இடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடி, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கீதா, 36. இவரது கணவர் சுரேஷ், 40. இவர், சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்திலும், சங்கீதா, கோவையில் உள்ள ஐ.டி., நிறுவனத்திலும், சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிகின்றனர். உடல்நிலை சரியில்லாததால், கடந்த, 5ல் சேலம் வந்த சங்கீதா, உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மதியம், 12:00 மணிக்கு அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், 72,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. சங்கீதா புகார்படி, இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை