உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பயிற்சிக்கு வராமல் 3 பேர் கையெழுத்திட்ட புகார் நடவடிக்கை எடுப்பதில் கல்வித்துறை அலட்சியம்?

பயிற்சிக்கு வராமல் 3 பேர் கையெழுத்திட்ட புகார் நடவடிக்கை எடுப்பதில் கல்வித்துறை அலட்சியம்?

இடைப்பாடி:அரசு பள்ளிக்கு பயிற்சிக்கு வராத, 3 மாணவர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டதாக எழுந்த புகாரில், நடவடிக்கை எடுக்காமல் கல்வித்துறை அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மொரசப்பட்டியில் தனியார் கல்வியியல் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள், 80 நாள் கற்றல், கற்பித்தல் பயிற்சிக்கு கடந்த செப்டம்பரில் பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில், 16 மாணவர்கள், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர். அதில், 13 பேர் பயிற்சிக்கு வந்த நிலையில், 3 பேர் வரவில்லை என புகார் எழுந்தது. அவர்கள் தினசரி வருகை பதிவேட்டிலும் கையெழுத்திடவில்லை.கடந்த ஜனவரியில் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வந்த மாணவர்களை அழைத்த, அப்பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஏற்கனவே மாணவர்கள் கையெழுத்திட்ட வருகைப்பதிவேட்டை பெற்று, புதிதாக ஒரு வருகைப்பதிவேட்டை வழங்கினர்.அதில் பயிற்சிக்கு வராத, 3 மாணவர்களின் கையெழுத்து இருந்தது. அதில் பயிற்சிக்கு வந்த, 13 பேரையும் கையெழுத்திட அறிவுறுத்தினர். அவர்களும் கையெழுத்திட்டனர்.ஆனால், அந்த மாணவர்களில் சிலர், பழைய வருகை பதிவேடு, புது வருகை பதிவேடு உள்ளிட்ட ஆதாரங்களுடன், கடந்த மார்ச்சில் முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளி கல்வித்துறை உள்பட பல்வேறு தரப்புக்கும் புகார் மனு அனுப்பினர். இதையடுத்து சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் கோலப்பா(இடைநிலை) கடந்த மாதம் முதல் வாரத்தில் விசாரித்து அதன் அறிக்கையை, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பினார். ஆனால், விசாரணை முடிந்து ஒன்றரை மாதங்களாகியும், சேலம் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என, புகார் அனுப்பிய மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுகுறித்து கோலப்பா கூறுகையில், ''இரு வித வருகை பதிவேட்டை வைத்து மாவட்ட கல்வித்துறைக்கு விசாரணை அறிக்கை கொடுத்துவிட்டேன். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது உயர் அதிகாரிகள்தான்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை