உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லெவல் கிராசிங் பகுதிகளில் விபத்தை தடுக்க நடவடிக்கை

லெவல் கிராசிங் பகுதிகளில் விபத்தை தடுக்க நடவடிக்கை

சேலம்;சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், ஜங்ஷனில் சர்வதேச ரயில்வே கிராசிங் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா தலைமை வகித்து, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், 'லெவல் கிராசிங் பகுதிகளில் விபத்துகளை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார். கூடுதல் மேலாளர் சிவலிங்கம், பாதுகாப்பு மேலாளர் ஆகாஷ்வர்மா, மாணவர்கள், ரயில்வே துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி