மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த, 18ல், 51.38 அடியாக இருந்த நேற்று, 63.83 அடியாக உயர்ந்தது. அதேபோல், 18.69 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 27.62 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. இரு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம், 12.5 அடி, நீர் இருப்பு, 9 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து காவிரி, கால்வாய்க்கு வினாடிக்கு, 4,714 கனஅடி நீர் திறக்கப்பட்டது. கே.ஆர்.எஸ்., அணை நீர்மட்டம், 120 அடி, நீர் இருப்பு, 43.5 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்ப இன்னும், 6 டி.எம்.சி., தேவை. இதனால் அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரிநீர், காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது.இதற்கிடையே, மேட்டூர் அணையின் மூலக்காடு, தின்னப்பட்டி, பண்ணவாடி, செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில், நான்கு நாட்களாக வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச்சென்றனர். கபினி அணையில் திறக்கப்பட்ட உபரி நீர் வந்ததால், வறண்ட நீர்ப்பரப்பு மூழ்க தொடங்கியது. இதனால் மண் அள்ள நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.