ஆத்துார்;கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, ஏற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட மலை கிராமங்கள் மற்றும் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில், இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசியதாவது:கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், கல்வராயன்மலை, சேர்வராயன்மலை, பச்சமலை என, மலைகள் சூழ்ந்த தொகுதியாக உள்ளது. இங்கு மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மின் கட்டண உயர்வு, வீட்டுவரி போன்றவைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.ஆத்துாரில், 13 முதல், 15 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் வினியோகம் செய்கின்றனர். தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சியினர், ஓட்டு கேட்டு மக்களிடம் செல்ல முடியாத நிலை உள்ளது. மக்களின் குறைகள் தீர்வு காணும் வகையில், ஆத்துார் மற்றும் கள்ளக்குறிச்சியில் இணைய வசதியுடன் மக்கள் சேவை மையம் அமைக்கப்படும்.இவ்வாறு பேசினார்.அ.தி.மு.க., மாநில செய்தி தொடர்பாளர் ஜவஹர்அலி பேசியதாவது: தி.மு.க., எம்.பி.,யை தேர்வு செய்தால், தற்போதுள்ள தி.மு.க., எம்.பி., கவுதமசிகாமணி போன்று, ஐந்து ஆண்டுகளுக்கு தொகுதி பக்கமே வரமாட்டார்கள். தி.மு.க., ஆட்சியில் எந்த புதிய திட்டமும் கொண்டு வர முடியவில்லை. தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு வீணடிக்க வேண்டாம். போதை மாநிலமாக மாறியுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதில் 'கறுப்பு' எம்.ஜி.ஆராக, வேட்பாளர் குமரகுரு உள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நகர செயலர் மோகன், முன்னாள் சேர்மன் காளிமுத்து, தே.மு.தி.க., மாவட்ட செயலர் இளங்கோவன், மாநில கேப்டன் மன்ற துணைச் செயலர் சுல்தான்பாஷா, நிர்வாகிகள் இன்பவேல், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.