உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

ஓமலுார்;காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை வனச்சரகம் சார்பில், உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி பொம்மியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா, தலைமை ஆசிரியர் கோகிலா தலைமையில் நேற்று நடந்தது. டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ், மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து வன பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர் இடையே எடுத்துரைத்தார். வனத்துறையினர், ஆசிரியர்கள், சிகரம் நண்பர் குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி