உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொகுதிக்கு தேவையானதை செய்வதில் செல்வகணபதி முன்னோடியாக இருப்பார்

தொகுதிக்கு தேவையானதை செய்வதில் செல்வகணபதி முன்னோடியாக இருப்பார்

சேலம்;'இண்டியா' கூட்டணி சார்பில், சேலத்தில் லோக்சபா தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அதில், தி.மு.க., வேட்பாளரான செல்வகணபதியை அறிமுகம் செய்து அமைச்சர் நேரு பேசியதாவது:ஒரு இடைத்தேர்தல் காலகட்டத்தில் தான் செல்வகணபதி, தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது தேர்தல் பொறுப்பாளராக இருந்த என்னை, ஐந்தாறு கிராமங்களுக்கு அழைத்துச்சென்றார். அங்கே யார், எந்த கட்சியை சேர்ந்தவர்கள், நடுநிலையாளர் யார், அவர்களை எப்படி அணுக வேண்டும், நமக்கு சாதகமானவர் யார் என்பதை ஓரிரு நாளில் புள்ளி விபரங்களுடன் வழங்கிய பட்டியலை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.எங்கெல்லாம் இடைத்தேர்தலில் பணியாற்றினேனோ அங்கெல்லாம் அவரும், என்னுடன் பணியாற்றினார். என்னுடன் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் பணியாற்றியவர்.அவருக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். டில்லியில் படித்தவர். சேலம் தொகுதிக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதை இலகுவாக கொண்டு வந்து சேர்ப்பதில் முன்னோடியாக இருப்பார்.அதனால் அவரை வெற்றிபெற வைப்பது நம் கடமை. சேலம் மாவட்டத்தில் மற்றொரு தலைவராக நம் செல்வகணபதியை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.'24 ஆண்டு வனவாசம்'வேட்பாளர் செல்வகணபதி பேசுகையில், ''ராமாயணத்தில் ராமனுக்கு, 14 ஆண்டு வனவாசம். ஆனால் இந்த செல்வகணபதிக்கு, 24 ஆண்டு வனவாசம். எதிரிகளின் சூழ்ச்சியால், என்னை பொய் வழக்கில் சேர்த்து விட்டார்கள். என், 40 ஆண்டு கால பொது வாழ்க்கையில், 24 ஆண்டுக்கு பின், இந்த வாய்ப்பை ஸ்டாலின் கொடுத்துள்ளார். தி.மு.க., தான் என் அடையாளம். எதிரிகளை வீழ்த்த உழைப்பு ஒன்று தான் ஆயுதம். போட்டியிடுவது செல்வகணபதி அல்ல; உதயசூரியன் என நினைத்து அனைவரும் உழைக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை