உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாலியை பறித்த ஆசிரியர் கைது

தாலியை பறித்த ஆசிரியர் கைது

வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி அருகே தானகுட்டிபாளையத்தை சேர்ந்த பெருமாள் மனைவி சுந்தரவல்லி, 60. இவர் வீடு அருகே கொய்யாபழம் விற்கிறார். அங்கு கடந்த ஜூலை, 30ல் இருசக்கர வாகனத்தில் வந்தவர், சுந்தரவல்லி அணிந்திருந்த, 2 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்றார். இதுகுறித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதை வைத்து விசாரித்ததில், மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரத்தை சேர்ந்த நந்தகுமார், 37, என்பதும், அவர் இளம்பிள்ளை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதும் தெரிந்தது. மேலும் பணப்பிரச்னையில் இருந்த அவர், சம்பவத்தன்று ஆட்டையாம்பட்டியில் உள்ள நண்பரிடம் கடன் வாங்க வந்தார். அவர் இல்லாத நிலையில் வீடு திரும்பும்போது சுந்தரவல்லியிடம் தாலியை பறித்ததும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை