உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காவிரியில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடிய போலீஸ்

காவிரியில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடிய போலீஸ்

காவிரியில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடிய போலீஸ்ஓமலுார், ஆக. 22-சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பெரியேரிப்பட்டி, பேராமரத்துாரை சேர்ந்தவர் பொன்னியம்மாள், 85. நகை, பணம் இருக்கும் என நம்பி, கடந்த, 3 இரவு, அப்பகுதியை சேர்ந்த சித்துராஜ், 30, தனுஷ், 22, மாரிமுத்து, 20, ஆகியோர், துாங்கிக்கொண்டிருந்த பொன்னியம்மாளை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, உடலை சாக்கு பையில் போட்டு காரில் எடுத்துச்சென்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுாரில் உள்ள காவிரி ஆற்றில் வீசினர்.தொளம்சம்பட்டி போலீசார், கொலை செய்த, 3 பேரையும் கைது செய்து அவர்கள் அளித்த வாக்குமூலப்படி, நேற்று முன்தினம் பரத்திவேலுார் சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் பரிசல் மூலம் மூதாட்டி உடலை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. சம்பவத்தன்று ஆடி, 18 என்பதால், காவிரி ஆற்றில், 1 லட்சம் கன அடி சென்றதால் உடல் அடித்துச்செல்லப்பட்டிருக்கும் என, அப்பகுதி பரிசல் ஓட்டிகள் தெரிவித்தனர். இதனால் உடல் கிடைக்காமல் போலீசார் திரும்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை