| ADDED : ஆக 18, 2024 04:26 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியம் குரால்நத்தம் ஊராட்சி கட்டுப்-பாட்டில் ஜருகுமலை உள்ளது. அங்கு மேலுார், கீழுர் கிராமங்-களில், 1,200 பேர் வசிக்கின்றனர். அதில், 748 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு அரசு நடுநிலைப்பள்ளி, ரேஷன் கடை உள்-ளன. மற்ற தேவைகளுக்கு மலைப்பாதையில், 7 கி.மீ., பய-ணித்து சேலம் மாநகர் வர வேண்டும்.இதுகுறித்து ஜருகுமலை மக்கள் கூறியதாவது: ஜருகுமலையில் இருந்து, 30 கி.மீ.,ல் குரால்நத்தம் ஊராட்சி அலுவலகம் உள்-ளது. ஆரம்ப சுகாதார நிலையம், 35 கி.மீ., தொலைவில் உள்ள தும்பல்பட்டியில் உள்ளது. வி.ஏ.ஓ., அலுவலகம் நிலவாரப்பட்-டியில் உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், கெஜ்ஜல்-நாயக்கன்பட்டியில் உள்ளது. அரசு அலுவலகங்கள் ஒவ்வொரு ஊரில் உள்ளதால் அங்கு சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர், சாலை, தெருவி-ளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைக்கும் குரால்நத்தம் செல்ல-வேண்டியுள்ளது. அரசு நலத்திட்டங்கள், எங்கள் கிராமத்திற்கு வந்து சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஜருகுமலையை தனி ஊராட்சியாக தரம் உயர்த்தினால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எளிதில் கிடைக்கும். எங்கள் மலைக்கிராமம் வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஊரக வளர்ச்சித்துறையினர் கூறுகையில், 'குரால்நத்தம் கிராம சபா கூட்டத்தில் ஜருகுமலையை தனி ஊராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தி மக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்' என்றனர்.