உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தை தடுக்க சர்வீஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுமா

விபத்தை தடுக்க சர்வீஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுமா

பனமரத்துப்பட்டி: சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலை, தாசநாயக்கன்பட்டியில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பிரதான சாலை மூடப்பட்டு, சர்வீஸ் சாலையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.மேற்கு பகுதி சர்வீஸ் சாலையில், நாமக்கல் பகுதியிலிருந்து சேலம் நோக்கி வாகனங்கள் வருகின்றன. அதே நேரத்தில், அதே சர்வீஸ் சாலையில் சேலம் பகுதியிலிருந்தும் வாகனங்கள் எதிரே வருகின்றன. குறுகலான சர்வீஸ் சாலையில், வாகனங்கள், எதிர் எதிரே வருவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் நின்றகின்றன. அவசரத்திற்கு செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சர்வீஸ் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற, போலீசார் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை