உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெடி விபத்தில் தொழிலாளி பலி ஆலையில் பட்டாசு உற்பத்திக்கு தடை

வெடி விபத்தில் தொழிலாளி பலி ஆலையில் பட்டாசு உற்பத்திக்கு தடை

ஆத்துார்:பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி இறந்ததால், அதன் விசாரணை முடியும்வரை, அங்கு பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர், அரசு கோவில் காட்டை சேர்ந்தவர் தனசேகரன், 45. 'மணி பயர் ஒர்க்ஸ்' பெயரில் பட்டாசுதயாரிப்பு ஆலை நடத்துகிறார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு அங்குள்ள ஒரு குடோனில்வெடி விபத்து ஏற்பட்டதில் கூலமேட்டை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம், 45, உடல் சிதறி உயிரிழந்தார்.உரிமையாளர் தனசேகரன், 4 பெண்கள் படுகாயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், விஜயா, வித்யா, தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ராஜமாணிக்கம் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது:பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தும், 4 குடோன்களுக்கும் தனித்தனியே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆலையில், 8 பேர் பணியில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாய் காப்பீடு செய்துள்ளனர். விபத்தில் இறந்த தொழிலாளிக்கு, உரிமையாளர் இழப்பீடு தருவதோடு காப்பீடு பெற்றுத்தருவதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''ஆலையில் பட்டாசு தயாரித்து விற்க உரிமம் வழங்கப்பட்டுஉள்ளது. பட்டாசு, வெடி மருந்து, மூலப்பொருட்கள் பாதுகாப்பாக குடோனில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, பட்டாசு தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை