உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 15,000 மீன் குஞ்சுகள்

15,000 மீன் குஞ்சுகள்

ஏற்காடு, உலக மீன்வளம் மற்றும் மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவ., 21ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, ஏற்காட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மேட்டூர் மீன்வள உதவி இயக்குனர் உமா கலைச்செல்வி தலைமையில், நேற்று ஏற்காட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள, படகு இல்ல ஏரியில் சாதா கெண்டை, ரோகு, மிருகால் ரகத்தை சேர்ந்த, 15,000 மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மீன்வள ஆய்வாளர் அசீனா பானு, ஏற்காடு மீன்வள மேற்பார்வையாளர் மோகன் மற்றும் படகு இல்ல ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏரியில் மீன்கள் விடப்பட்டதை தொடர்ந்து மீன் வளர்ப்பு, அதன் நன்மைகள் குறித்து மீனவர்களிடம் கூறப்பட்டது. மேலும் மீன் வளர்ப்பால் ஏரி நீர் துாய்மை அடையும் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை