உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கற்களை வீசி 2 தரப்பினர் மோதல் ஏட்டு மண்டை உடைப்பு; 8 பேர் கைது

கற்களை வீசி 2 தரப்பினர் மோதல் ஏட்டு மண்டை உடைப்பு; 8 பேர் கைது

ஆத்துார்: இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்கிக்கொண்டதில் ஏட்டு மண்டை உடைந்தது. இதில், 8 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்பகனுாரை சேர்ந்த ஒரு தரப்பினர், சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநாடு குறித்து அவதுாறு கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதற்கு மற்றொரு தரப்பை சேர்ந்த, 17 வயது சிறுவன், இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்துார் ஊரக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பேச்சு நடத்தினர்.அப்போது ஒருவரை ஒருவர் கற்கள், செங்கல் வீசி தாக்கிக்கொண்டனர். ஒரு தரப்பினர், சிறுவன் தரப்பு பகுதிக்குள் சென்று, ஏ.டி.எம்., மினி சரக்கு வேன், பைக், சைக்கிள், பாத்திரங்களை சேதப்படுத்தினர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த, வீரகனுார் போலீஸ் ஏட்டு முருகவேல், 49, மண்டை உடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் போலீசார், இரு தரப்பினரையும் விரட்டிவிட்டனர்.தொடர்ந்து சேலம் டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., அருண்கபிலன், ஆத்துார் ஆர்.டி.ஓ., ரமேஷ், சம்பவ இடத்தில் விசாரித்தனர். கூடுதல் எஸ்.பி., சங்கர் தலைமையில், 50 போலீசார், ஊர் நுழைவு பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஏட்டு முருகவேல் புகாரில் அரசு பணியை தடுத்தல், மிரட்டல், பொதுச்சொத்து சேதப்படுத்தல் உள்பட, 7 பிரிவுகளில் இரு தரப்பில், 40க்கும் மேற்பட்டோர் மீது ஆத்துார் ஊரக போலீசார் வழக்குப்பதிந்தனர். அதில் ஒரு தரப்பை சேர்ந்த கல்பகனுார், மொரப்பங்காடு செல்வம், 38, செந்தில்குமார், 48, ஆகியோரை கைது செய்தனர்.அதேபோல் கல்பகனுார் வி.ஏ.ஓ., சரவணன், 51, அளித்த புகாரில் ஆத்துார், தாண்டவராயபுரம், வி.சி., நிர்வாகிகள் தங்கவளவன், 36, குருசந்திரன், 27, பாரதிராஜா, 28, மற்றொரு தரப்பில் இளங்கோ, 30, குறளரசன், 23, அம்மம்பாளையம் அர்ஜூனன், 39, ஆகியோரை கைது செய்தனர். இதுதவிர, பா.ம.க., ஒன்றிய செயலர் செந்தில்குமார், 44, புகாரில், வெற்றிச்செல்வன், 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை