உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளியில் மது குடிக்க எதிர்ப்பு மாணவரை தாக்கிய 2 பேர் கைது

பள்ளியில் மது குடிக்க எதிர்ப்பு மாணவரை தாக்கிய 2 பேர் கைது

சேலம் : சேலம் அருகே தளவாய்பட்டியை சேர்ந்த கோபி மகன் அன்புசெல்வம், 19. இவர் தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்.ஏற்கனவே படித்து வந்த சித்தனுாரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு, 5 பேர் மது அருந்தினர். இதற்கு அன்புசெல்வம் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த கும்பல், மாணவரை சரமாரியாக தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்து, சித்தனுார் கோபி, 28, விக்னேஷ், 25, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, 3 பேரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை