உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோதனையில் சிக்கிய 4.19 லட்சம் பறிமுதல்

சோதனையில் சிக்கிய 4.19 லட்சம் பறிமுதல்

சேலம் : சேலம் வடக்கு தொகுதி பறக்கும்படை அலுவலர் இளங்கோ தலைமையில் குழுவினர், நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு பால் மார்க்கெட் மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த மினி சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 94,700 ரூபாய் இருந்தது. விசாரணையில் டிரைவர் சீனிவாசன், 40, பழங்களை மொத்த வியாபாரம் செய்துவிட்டு, பணத்தை எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் ரசீது, ஆவணம் எதுவும் இல்லை. இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதேபோல் வடக்கு தொகுதி நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் செல்வகுமார் தலைமையில் குழுவினர், நேற்று முன்தினம் இரவு, 11:50 மணிக்கு அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'வேல்ஸ்வேகன்' காரை நிறுத்தி சோதித்ததில், 66,000 ரூபாய் சிக்கியது. காரை ஓட்டி வந்தவர், சேலம் காந்தி சாலையை சேர்ந்த மருத்துவர் வினோலா, 47, என்பதும், அவர் வைத்திருந்த பணத்துக்கு ரசீது இல்லை. பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட தொகை, 1,60,700 ரூபாய், சேலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.சேலம் தெற்கு தொகுதி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் விவேகானந்தன் தலைமையிmf குழுவினர், நேற்று காலை, 11:50 மணிக்கு கரும்பாலை பஸ் ஸ்டாப் அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டத்தில், 71,850 ரூபாய் சிக்கியது. விசாரணையில் அழகாபுரம் மிட்டாபுதுரை சேர்ந்த அஜித், 28, ஓமலுாரை சேர்ந்த கணேஷ்குமார், 26, என்பதும், இருவரிடமும் பணத்துக்கு ரசீது இல்லை என்பதும் தெரிந்தது. பின் பறிமுதல் செய்த பணம், சூரமங்கலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.ஓமலுார் சட்டசபை தொகுதி, தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, நிலை கண்காணிப்பு அலுவலர் அசோக்குமார் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரள பதிவெண் கொண்ட, 'கிரிஸ்டா' காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது சிபி என்பவர் ஆவணமின்றி எடுத்து வந்த, 1,87,500 ரூபாயை பறிமுதல் செய்து கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை