உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 9 மாற்றுத்திறன் ஜோடிக்கு சீர்வரிசை வழங்கி திருமணம்

9 மாற்றுத்திறன் ஜோடிக்கு சீர்வரிசை வழங்கி திருமணம்

சேலம்: சேலம் ரோட்டரி கிளப் ஆப் எலைட், மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இணைந்து, அழகாபுரத்தில், 9 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணத்தை நேற்று நடத்தி வைத்தன. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் திருமணம் நடந்தது.மணமக்களுக்கு திருமாங்கல்யம், எவர்சில்வர் பாத்திரங்கள், மளிகை பொருட்கள், கிரைண்டர், மிக்ஸி, கட்டில், மெத்தை உள்-ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்-கப்பட்டன. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட மாற்றுத்-திறனாளி நல அலுவலர் செண்பகவள்ளி, மணமக்களின் குடும்பத்-தினர் பங்கேற்றனர்.அனைவருக்கும் மதியம் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எலைட் தலைவர் மகேஷ்குமார், சங்கத்தலைவர் அத்தியண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி