உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் அருகே அரிவாளுடன் வீதியில் வலம் வந்த ரவுடி

சேலம் அருகே அரிவாளுடன் வீதியில் வலம் வந்த ரவுடி

சேலம்: சேலம் அருகே, வீச்சரிவாளுடன் வீதியில் வலம் வந்த ரவுடி, தட்டி கேட்டவரை வெட்டிவிட்டு தப்பியோடியதால் மக்கள் அச்-சமடைந்தனர்.இரும்பாலை அருகே திருமலைகிரி, சந்தைபேட்டையை சேர்ந்த ரவுடி மணிகண்டன். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீச்-சரிவாளுடன் வள்ளுவர் தெரு பகுதியில் சுற்றித் திரிந்தார். இதை அப்பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் தட்டிக் கேட்-டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ரவுடி மணிகண்டன், லிங்-கேஸ்வரன் மீது வீச்சரிவாளை வீசியுள்ளார். அந்த அரிவாள் லிங்-கேஸ்வரனின் வீட்டின் மேற்கூரையில் பட்டு, அவர் மேல் பட்-டதால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். லிங்கேஸ்வரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி மணிகண்டன் அங்கிருந்து தப்பினார். இரும்பாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை