உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூசாரிப்பட்டியில் கார் மோதி தொழிலாளி பலி

பூசாரிப்பட்டியில் கார் மோதி தொழிலாளி பலி

காடையாம்பட்டி, தேசிய நெடுஞ்சாலையை குறுக்கே கடக்க முயன்ற தொழிலாளி, கார் மோதி உயிரிழந்தார்.ஓமலுார் சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் அன்பு, 38. கூலி தொழிலாளி. மனைவி கலா, 35. இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஓமலுார்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை, பூசாரிப்பட்டி பிரிவு ரோட்டின் குறுக்கே நடந்து சென்ற போது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த, கர்நாடகா பதிவெண் கொண்ட எடியாஸ் கார் மோதியதில், அன்பு பலத்த காயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார். நேற்று கலா அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை