| ADDED : ஜன 12, 2024 11:58 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:கவுன்சிலர் ருக்குமணி(அ.தி.மு.க.,): நகராட்சியில், 5 நாள் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்துக்கு, 4.95 லட்சம் ரூபாய் செலவு என, கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதற்கு அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது.மேலாளர் கார்த்திகேயன்: ஒவ்வொன்றாக பார்த்து குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளன. இது உத்தேச செலவினம் தான்.கவுன்சிலர் தனபால் (பா.ம.க.,): குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை.நகராட்சி பொறியாளர் பிரேமா: அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அமைக்கப்படும்.கவுன்சிலர் சாமுண்டீஸ்வரி(தி.மு.க.,): ஏரிக்கொடியில் தெரு விளக்கு கேட்டு சண்டையிட்டும் இதுவரை பலன் இல்லை.தலைவர் குணசேகரன்: நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.தொடர்ந்து, 33 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. துணைத்தலைவர் தனம், கமிஷனர் சேம் கிங்ஸ்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.