உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு ஏ.டி.எஸ்.பி., அஞ்சலி

எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு ஏ.டி.எஸ்.பி., அஞ்சலி

ஓமலுார், ஓமலுார், தொளசம்பட்டி அருகே அமரகுந்தியை சேர்ந்தவர் முருகன், 55. ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். நேற்று முன்தினம், அவர் காரில், நங்கவள்ளி அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, மினி பஸ் மோதியது. அதில் முருகன் படுகாயம் அடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். நேற்று அவரது இறுதிச்சடங்கு, அமரகுந்தியில் நடந்தது. முருகன் உடலுக்கு, சேலம் ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின் முருகன் மனைவி விஜயலட்சுமியிடம், அரசு சார்பில் ஈமக்காரியம் செய்ய, ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார். ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், நங்கவள்ளி இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்ளிட்ட போலீசாரும் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை